Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரேசில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் நண்பர் தோல்வி: வெற்றி வாகை சூடினார் லூலா டா சில்வா

பிரேசில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் நண்பர் தோல்வி: வெற்றி வாகை சூடினார் லூலா டா சில்வா

இந்த வெற்றியை லூலாவின் ஆதரவாளர்கள் ரியோ டி ஜெனிரோ, சாவ் பாலோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

கால்பந்து விளையாட்டுக்குப் பிரசித்தி பெற்ற பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நண்பரை வீழ்த்தினார் தற்போதைய அதிபர் இனாசியோ லூலா டா சில்வா.

இந்த தேர்தலில் லூலாவை எதிர்த்து முன்னாள் அதிபரின் மகனும், வலதுசாரி வேட்பாளருமான ஃப்ளாவியோ போல்சனாரோ போட்டியிட்டார். அவருக்கு ட்ரம்ப் ஆதரவும் இருந்தது. கடந்த 4-ம் தேதி நடந்த பிரேசில் அதிபர் தேர்தலின் முதல்கட்ட முடிவின்படி ஃப்ளாவியோ போல்சனாரோ 47.03% வாக்குகள் பெற்றார். அதிபர் லூலா டா சில்வா 45.16% வாக்குகள் பெற்றார். எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை பெறாத நிலையில், இறுதி மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் 80 வயதான லூலா டா சில்வா 51.79% வாக்குகள் பெற்று 4-வது முறையாக வென்றுள்ளார். ஃப்ளாவியோ போல்சனாரோ 48.25% வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இந்த வெற்றியை லூலாவின் ஆதரவாளர்கள் ரியோ டி ஜெனிரோ, சாவ் பாலோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். லத்தின் அமெரிக்காவின் பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் மீண்டும் இடதுசாரி ஆட்சி தொடர்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவுடனான வர்த்தகக் கொள்கைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2002, 2006, 2022, 2026 அதிபர் தேர்தல்களில் லூலா வெற்றி பெற்றுள்ளார். 1989, 1994, 1998 அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. லூலாவின் ஆட்சியில் வறுமை ஒழிப்பு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். பிரேசிலின் முக்கியப் பிரச்சினையான பட்டினி ஒழிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
Key Ooty highway remains disrupted after landslide
அடுத்த செய்தி
Heavy rains damaged crops on 400 acres in Karur district

தொடர்புடைய செய்திகள்